மியான்மரின் ரோஹிங்கா முஸ்லிம்களின் உள்நாட்டு பிரச்சனைகள், கடல் வழியாக அடிமைகளாக கடத்தப்படுவதன் பிண்ணனி, அவர்கள் விஷயத்தி...
Posted by முஹம்மது ரிஃபாயி on Sunday, May 31, 2015
நல்லதைப் பேணுவோம்.. நல்லாரைப் போற்றுவோம்.. நல்லோனைத் தொழுவோம்.. நன்மையை நாடுவோம்...
Showing posts with label விழிப்புணர்வு. Show all posts
Showing posts with label விழிப்புணர்வு. Show all posts
Sunday, May 31, 2015
ரோஹிங்கா முஸ்லிம்கள் பிரச்சனைகள்: தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை உண்மைகள்
Saturday, May 30, 2015
ஆர்வக்கோளாறுகளை என்ன செய்வது..????
இந்த மாதிரி ஒரு தகவல் பேஸ்புக்கில் அதிகமாக பரப்பப் படுகிறது. அவ்வாறு பரப்புவதன் நோக்கம் என்ன? ஒரு முஸ்லிம், தாடி வைத்...
Posted by முஹம்மது ரிஃபாயி on Friday, May 29, 2015
Wednesday, May 27, 2015
பிராமணியம் வெறுக்கத்தக்கதா..??? தமிமுன் அன்சாரியின் பேஸ்புக் பதிவு
பிராமணர்களை வெறுப்பு கண்கொண்டே நாம் பார்த்து வருகிறோம்.எல்லா சமூகங்களிலும் கெட்டவர்களைப் போல நல்லவர்களும் இருக்கிறார்கள். நான் பழகிய பிராமணர்களில் நல்ல நண்பர்கள் நிறைய நபர்கள் இருக்கிறார்கள்.
Posted by முஹம்மது ரிஃபாயி on Monday, May 25, 2015
முஸ்லீம் என்பதால் இளம் பெண்ணை வீட்டை காலி செய்ய வைத்த பேரினவாதம்.
மும்பையில் முஸ்லீம் என்பதால் இளம் பெண்ணை வீட்டை காலி செய்ய வைத்த பேரினவாதம்.முஸ்லீம் என்பதால்.. வேலை இல்லைமுஸ்லீம் என...
Posted by முஹம்மது ரிஃபாயி on Wednesday, May 27, 2015
போட்டோஷாப் பிரியர்களின் கைவரிசை
யாரோ ஒருவர் பேராசிரியரின் புகைப்படத்துடன் போட்டோஷாப் மூலம் ‘மிகநேர்த்தியாக’ உருவாக்கிய படமே தற்போது முகநூலில் பரவி வ...
Posted by முஹம்மது ரிஃபாயி on Wednesday, May 27, 2015
Saturday, February 16, 2013
விஸ்வரூபம் : விஷமத் தனத்தின் சூத்திரதாரி யார்..?
மது,ஆபாசம்,வன்முறை,முறைகேடுகள் உள்ளிட்ட சமூகத் தீமைகளை சந்தைப்படுத்தும் களமாக மாறிவிட்டதால்.. திரைப்படங்களை.. அதிலும் குறிப்பாக இந்திய திரைப்படங்களைத் தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்ற கொள்கையில் உறுதியுடன் இருந்து வருகிறேன்.
சமீப நாள்களாக அகில இந்திய அளவிலும் உலகளாவிய தமிழர்கள் உள்ளிட்ட தென்னிந்தியர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பையும் விவாதங்களையும் ஏற்படுத்தி கடந்த ஒரு மாதத்தில் மீடியாக்களின் பரபரப்பு வியாபாரத்துக்கு தீனி போட்டு வந்த கமலஹாசனின் விஸவரூபம் திரைப்படம் தற்போது திரைக்கு வந்திருக்கிறது.
பொதுவாகவே உலகளாவிய அளவில் திரைப்படம்,தொலைக்காட்சி,அச்சு,
இணையதள ஊடகங்கள் கடந்த 20 ஆண்டுகளாகவே இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக காட்சிப் படுத்திக் கொண்டிருக்கின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது.
காசுக்காகவும்,மக்களின் கவனத்தை தம் பக்கம் ஈர்ப்பதற்காகவும் விஜயகாந்த்அர்ஜுன் போன்ற நடிகர்கள் தேசபக்திப் படங்கள் என்ற போர்வையில் பாகிஸ்தான் தீவிரவாதிகளை தமிழ் பேச வைத்து காசு பார்த்ததை யாரும் பெரிய விஷயமாக கருதவில்லை.
உலகநாயகன் என்ற அடைமொழியோடு திரைத்துறையில் உலாவரும் ஒரு நடிகர், இன்று வரை தமது நிறைவேறாத கனவாக இருந்து வரும் ஆஸ்கர் விருதுக்காக உலகின் சாட்டாம் பிள்ளையாக திகழும் அமெரிக்காவின் போர் வெறியை நியாயப்படுத்தும் வகையிலும்,தம் மண்ணை மீட்க போராடும் ஆப்கானிஸ்தான் போராளிகளின் விடுதலைப் போராட்டத்துக்கு பயங்கரவாத சாயம் பூசி அதனை இஸ்லாத்துடன் இணைத்து மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட முயன்றுள்ளார்.
எங்கேயோ இருக்கும் ஆப்கானிஸ்தான் பற்றி படமெடுக்க துனிந்த இந்த உலக நாயகன்.. தமிழகத்துக்கு மிக அருகில் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து நிற்கும் ஈழத் தமிழர்களின் அவலங்களையும்,சிங்களவன் செய்யும் அட்டூழியங்ளையும் பற்றி இது வரை படமெடுக்காததன் மர்மம் என்னவோ.. யாமறியேன்.
சரி விஷயத்துக்கு வருவோம்..ஒரு வழியாக பல்வேறு காட்சிகள் வெட்டி எறியப்பட்டு திரைக்கு வந்திருக்கிறது. இப்படத்தை நானும் பார்த்தேன்.நான் பார்த்தது 24 அமைப்பக்களும் சேர்ந்து முதன் முறையாக படம் பார்த்தார்களே... அந்த வெட்டப்படாத பிரிண்டாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.
(அப்படியென்றால்.. எங்கே பார்த்தாய்..? உனக்கு வெட்டப்படாத காட்சிகளுடன் கூடிய அந்த பிரிண்ட் எவ்வாறு கிடைத்தது என்றெல்லாம் குறுக்கு விசாரனைகள் செய்யாதீர்கள்.. நதி மூலமும் ரிஷி மூலமும் பார்க்கக் கூடாது)
ஓட்டுமொத்தமாகவே திரைப்படங்கள் பற்றிய நல்ல அபிப்பிராயங்கள் இல்லாத காரணத்தால்... கமல் புகுத்தியிருப்பதாக கூறப்படும் உலகத் தரம் பற்றியோ,உள்ளூர் தரம் பற்றியோ எனக்கு தெரியாது.
ஆனால் விஸ்வரூபம் பார்த்த பின்பு எனக்கு கமலின் இஸ்லாமிய இழிவு படுத்தல்களின் பின்னணியில் யாரோ ஒரு கருப்பு ஆடு நம் சமுதாயத்தில் இருந்திருக்கிறது என்பது மட்டும் நன்றாக புரிந்தது.
இழிவுபடுத்தல்களின் உச்சகட்டமாக வரும் காட்சிகளில் சிலவற்றில்..
திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள'ரப்பனா ஆதினா ஃபித்துன்யா' என்ற பிரபலமான பிரார்த்தனை வசனங்களை அட்சரம்பிசகாமல் கமல் உச்சரிக்கிறார்...
பொதுமக்கள் முன்னிலையில் ஒருவருக்கு தூக்கு தண்டனை வழங்கப்படுவதற்கு முன், ஒரு முதவ்வா (இஸ்லாமிய அறிஞர்) முன்தாக ; சொற்பொழிவுகள் தொடங்கப்படும் போது அரபியில் சொல்லப்படும் ஹம்து-ஸலவாத்து எனப்படும் அல்லாஹ்வையும் நபிகளாரையும் புகழும் அரபி வாசகங்களைக் கூறி..
இதற்கு காரணம் முன்னமேயே உங்கள் கைகள் செய்து அனுப்பிய கெட்ட செயல்களேயாகும்;. நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களுக்கு எவ்வித அநீதியும் செய்பவனல்லன் (3:182
ஆகிய வசனங்களை ஓதிய பின்னர் அவரை தூக்கிலிட்டு அல்லாஹுஅக்பர் என்பதாக தக்பீர் முழங்கி தொங்கும் சடலத்தை நோக்கி தமது கரங்களில் தூக்கிப் பிடித்திருக்கும் துப்பாக்கியால் சுடுகின்றனர்
தமது தலையில் முடியை மழித்து..பின்னர் தமது மர்மஸ்தான முடிகளையும் களைந்த பின்னர் தான் நாசவேலையை செய்வதற்கு ஓர்; ஜிஹாதி தயாராவது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
பின்னணி இசையில் கூட துவேஷம் கலக்கப்பட்டுள்ளது... அராபிய இசையைக் கலந்து சலவாத் எனப்படும் நபிகளாரைப் புகழும் அரபு வாசகங்களை அரபு நாடுகளில் பாடல்களாக ஒலிக்கப்படுவதை அங்கே சென்று வந்த முஸ்லிம்களுக்கு நன்றாக தெரியும்.இந்தப் படத்தில் தீவிரவாதிகள் நாசவேலை செய்வதாக காண்பிக்கும் வேளையிலும்,தீவிரவாதிகளை எண்கௌன்டர் செய்யும் போதும்,இறுதியாக கமலின் படுக்கையறைக் காட்சியிலும் அந்த இசையை பின்னணியாக சேர்த்துள்ளனர்.
இது போன்ற திருக்குர்ஆன் வசனங்கள், காட்சிகள் போன்ற இஸ்லாமியர்களுக்கு கூட தெரியாத சில விஷயங்களை துவேஷத்துடன் காட்சிப்படுத்த கமலால் மட்டும் முடியக் கூடிய காரியமல்ல... மார்க்கம் கற்றறிந்த ஒருவரின் துணையின்றி கமல் இவற்றை செய்திருக்க வாய்ப்பே இல்லை.
நயவஞ்சகர்களின் அட்டூழியங்ளை நபிகளார் காலத்திலிருந்தே இஸ்லாம் எதிர்கொண்டு வருவதை வரலாறு நெடுகிலும் நம்மால் காண முடிகிறது.
திட்டமிட்டுச் சதி செய்தார்கள். அல்லாஹ்வும் சதி செய்தான்;. தவிர அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான். (3:54)
Sunday, January 27, 2013
தி மெஸேஜ்.... திரைப்படம்.
நேற்று எனது கணிணியின் டவுன்லோடு போல்டரை நான் துழாவிக் கொண்டிருந்த வேளையில் என் பார்வையில் பட்டது 'தி மெஸெஜ்'என்கிற ஆங்கில திரைப்படம்.முழு திரைப்படத்தில் பாதியளவு மாத்திரமே எனது கணிணியில் பதிவாகி இருந்தது.இதனை இரண்டு தடவை பார்த்தேன்.
இறைத்தூதர்
நபிகளார் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பேசக்கூடிய வகையில்1976 ஆம்
ஆண்டில் எடுக்கப்பட்ட இத் திரைப்படம் ஜோர்டான் நாட்டை சேர்ந்த முஸ்தபா
அக்காத் என்பவரால் இயக்கி ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டு
வெளியிடப்பட்டுள்ளது.(இவர் தான் லிபியா புரட்சியாளர் உமர் முக்தார் பற்றிய
படமான லயன் ஆஃப் தி டெஸ்ஸர்ட் என்ற படத்தையும் இயக்கியவர்)
ஹெராக்கிளியஸ் மன்னன்,அலெக்ஸாண்டிரியாவின் பேரரசன் உள்ளிட்ட உலக
தலைவர்களுக்கு நபியவர்கள் அனுப்பிய இஸ்லாமிய அழைப்பு செய்திகளுடன் இப்படம்
தொடங்குகிறது.அபிசீனியா மற்றும் மதீனாவுக்கு முஸ்லிம்கள் ஹிஜ்ரத்
சென்றது,மதினா வாசிகளோடு நபியவர்கள் செய்து கொண்ட பிரபல அகபா
ஒப்பந்தம்,மதினாவிற்குள் நபியவர்கள் முதன்முதலாக நுழைந்த வேளையில் அங்கே
அவர்களுக்கு வழங்கப்பட்ட உற்சாக வரவேற்பு,மஸ்ஜிதுந் நபவியின் கட்டுமானம்,பிலால்
(ரலி)அவர்கள் முதன் முதலில் (பாங்கு) தொழுகை அழைப்பு விடுத்தது உள்ளிட்ட
முக்கிய சம்பவங்களை காணும் போது நாமும் அக்காலத்தில் வாழ்வது போன்ற உணர்வு
ஏற்படுகிறது.
அபு சுப்யான் இவரது மனைவி ஹிந்தா மற்றும் அபு ஜஹ்ல்
உள்ளிட்ட மக்கா குறைஷிப் பிரமுகர்களும் ஹம்ஸா (ரலி)ஜாபர் இப்னு அபுதாலிப்
(ரலி) ஜைத் (ரலி) பிலால் (ரலி) அம்மார் (ரலி)யாஸிர் (ரலி) சுமைய்யா
(ரலி)ஆகிய நபித் தோழர்களும் நபியவர்களின் சிறிய தந்தையான அபு தாலிப்
அவர்களும் அழகிய முறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர்.
முஸ்லிம்கள்
கலிமாவை உச்சரிக்கும் போது எப்போதுமே அரபியில் தான் உச்சரிப்பர்.ஆனால்
அந்த கலிமாவையும் அல்லாஹூஅக்பர் என்பன போன்ற முக்கிய அரபி வாசகங்களையும்
அரபியிலேயே உச்சரிக்காமல் அதன் பொருளை ஆங்கிலத்தில் கூறுவதாக
காட்சிப்படுத்தியது சற்று நெருடலாக இருந்தது.
பொதுவாகவே
திரைப்படங்களுக்கு பொழுது போக்கு ஊடகம் என்கிற பெயர் இருந்த போதிலும்,
கதையை மையப்படுத்தி தான் திரைப்படம் அமைய வேண்டும் என்ற நிலை மாறி
ஹீரோக்களுக்காகவே கதைகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற நிலையில்,இன்று
ஹீரோயிஸத்தை சந்தைப்படுத்தும் சாதனமாக சினிமா மாறிவிட்டது.இந்திய சினிமா
முதல் ஹாலிவுட் வரை இதே நிலை தான்.
இத்தகைய பிற்போக்குத்
தனங்களுக்கு ஆட்படாமல்,முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கையை சுற்றியே இந்த
திரைப்படம் உருவாக்கப்பட்டிருந்த போதிலும் கதையின் நாயகர் நபிகளார் ஒரு
இடத்தில் கூட நேரடியாகவோ அல்லது நிழலாகவோ காட்சிப் படுத்தப் படவில்லை
என்பது சினிமா துறையில் ஓர் அதிசய நிகழ்வாக இப்படம் அமைந்துள்ளது.
முழு படத்தையும் பார்க்காமல், இத்திரைப்படத்தில் எந்த காட்சிகளும்
மிகைப்படுத்தப்படவில்லை இயல்பாக அமைந்திருக்கிறது என்பதாக என்னால்
நற்சான்றிதழ் வழங்க முடியாது.ஆயினும்..இது போன்ற படங்களை தமிழில் டப்பிங்
செய்து வெளியிடும் முயற்சியில் தாஃவா பணியில் தம்மை ஈடுபடுத்திக்
கொண்டிருப்போர் முன் வரவேண்டும் என்பது எனது விருப்பமாகும்.
Monday, December 3, 2012
தலித் எதிர்ப்பு அரசியலா...?
பெற்றோர் விருப்பத்தை மீறி குறிப்பிட்ட சாதி-மத பெண்களை காதல் வலையில் வீழ்த்தி அவர்களை கல்யாணம் செய்வது போல நடித்து கர்ப்பமாக்கி விட்டு நடுத்தெருவில் நிற்க வைத்து ஓடி விடுவது தமிழகத்தில் நடந்து கொண்டேதான் இருக்கிறது.இத்தீய நடவடிக்கைகளால் முஸ்லிம்கள் பெருமளவில் பாதிக்கப்படடுள்ளனர்.ஆனாலும் பொது இடங்களில் முஸ்லிம்கள் இந்த பாதிப்பு பற்றி பெரிய அளவில் விவாதிக்கவில்லை.ராமதாஸ் இது தொடர்பாக நேற்று அணைத்து சமுதாய மதத் தலைவர்களின் கூட்டத்தை கூட்டி இந்த விசயத்தை விவாதித்து சில தீர்மாணங்களை நிறைவேற்றியுள்ளார்.
கூட்டத்தில் பேசப்பட்ட நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இவை தான்
இந்த கூட்டத்தை தலித் எதிர்ப்பு கூட்டம் என்று சில அறிவுஜீவிகள் விமர்சிக்கின்றனர்.
அவர்களுக்கு நாம் முன்வைக்கும் சில விஷயங்கள்..
ராமதாஸ்.. தர்மபுரியில் இவரது சாதிப் பெண்னொருவள் ஓடிப்போய் விட்டாள்
என்பதற்காக இந்த கூட்டத்தை கூட்டியிருக்கலாம்.அதை எவ்வாறு நீங்கள் தவறு
என்று சொல்கிறீர்கள்?
முஸ்லிம் பெண்களை கடந்த காலங்களில் காதல்
வயப்படுத்தி மற்ற மத சாதியினர் கவர்ந்து சென்றதை நீங்கள் இல்லை என்று
மறுக்கத் தயாரா..?இல்லை.... இந்த செயல்களை நீங்கள் ஏற்றுக்
கொள்கிறீர்களா..?
இந்த விசயத்தை தமுமுகவோ எஸ்டிபிஐ போன்ற
இஸ்லாமிய இயக்கங்களோ தனியாக தம்மளவில் மாத்திரம் பேசி தீர்மானம் நிறைவேற்றி
இருந்தால் இந்த அளவுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்குமா..? என்பது
சந்தேகம் தான்.
இன்று வரை நமது உள்ளத்திலேயே புகைந்து
கொண்டிருந்த இந்த விவகாரத்தை ஒரு பொது இடத்தில் வைத்து ராமதாஸ் விவாதிக்க
தொடங்கி இருக்கிறார். இது தலித்துகளுக்கு எதிரானது என்ற விமர்சனம்
தவறானது.நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் அவ்வளவு தான்.
கொள்ளுமேடு ரிஃபாயி
இந்த கூட்டத்தை தலித் எதிர்ப்பு கூட்டம் என்று சில அறிவுஜீவிகள் விமர்சிக்கின்றனர்.
அவர்களுக்கு நாம் முன்வைக்கும் சில விஷயங்கள்..
ராமதாஸ்.. தர்மபுரியில் இவரது சாதிப் பெண்னொருவள் ஓடிப்போய் விட்டாள்
என்பதற்காக இந்த கூட்டத்தை கூட்டியிருக்கலாம்.அதை எவ்வாறு நீங்கள் தவறு
என்று சொல்கிறீர்கள்?
முஸ்லிம் பெண்களை கடந்த காலங்களில் காதல்
வயப்படுத்தி மற்ற மத சாதியினர் கவர்ந்து சென்றதை நீங்கள் இல்லை என்று
மறுக்கத் தயாரா..?இல்லை.... இந்த செயல்களை நீங்கள் ஏற்றுக்
கொள்கிறீர்களா..?
இந்த விசயத்தை தமுமுகவோ எஸ்டிபிஐ போன்ற
இஸ்லாமிய இயக்கங்களோ தனியாக தம்மளவில் மாத்திரம் பேசி தீர்மானம் நிறைவேற்றி
இருந்தால் இந்த அளவுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்குமா..? என்பது
சந்தேகம் தான்.
இன்று வரை நமது உள்ளத்திலேயே புகைந்து
கொண்டிருந்த இந்த விவகாரத்தை ஒரு பொது இடத்தில் வைத்து ராமதாஸ் விவாதிக்க
தொடங்கி இருக்கிறார். இது தலித்துகளுக்கு எதிரானது என்ற விமர்சனம்
தவறானது.நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் அவ்வளவு தான்.
கொள்ளுமேடு ரிஃபாயி
Saturday, November 24, 2012
16-22 நவம்பர் 2012 தேதியிட்ட மக்கள் உரிமை இதழில் வெளியான எனது கடிதம்
நவம்பர் 09-15 தேதியிட்ட மக்கள் உரிமை இதழல் வெளியான 'மதரஸா கல்வி:தேவை மாற்றம்' என்ற தலைப்பிலான ஆய்வு கட்டுரை படித்தேன்.
ஜாமிஆ மன்பவுல் அன்வார் எனும் இஸ்லாமிய மதரஸா அமையப் பெற்ற லால்பேட்டைக்கு மிக நெருக்கமான ஒரு ஊரில்,மார்க்க கல்வி பயின்றவர்கள் நிறைந்துள்ள ஓர் குடும்பத்தில் பிறந்த ஒருவனாக நான் இக்கட்டுரை குறித்து சில கருத்துக்களை பரிமாறிக் கொள்ள விழைகிறேன்.
தங்களது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளவாறு இன்றைய சமூகத்தில் ஆன்மீக வறுமை ஏற்பட்டுள்ளது என்பதும்,அதற்கு இஸ்லாமிய கல்வி மட்டுமே சரியானதொரு தீர்வாக அமையும் என்பது மறுக்க முடியா பேருண்மையாகும்.
கல்வி கற்றல் என்பது பணம் சம்பாதிப்பதற்கான குறுக்கு வழி என்ற ஒரு விஷமச் சிந்தனை இன்றைய முதலாளித்துவ சூழலில் விரும்பி விதைக்கப்பட்டுவிட்டது.இதன் விளைவாக மதரஸாக்களுக்கு சென்று மார்க்கத்தை பயில்வது பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது.
அதே நேரம் நமது மதரஸாக்களின் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட வேண்டிய கட்டாயம் இன்றைக்கு உருவாகி இருக்கிறது.
உலகின் ஏற்படும் அணைத்து பிரச்சனைகளுக்கும் இஸ்லாத்தில் மாத்திரமே தீர்வு இருப்பதாக மேடைகள் தோறும் நாம் முழங்கி வருகிறோம்.இத்தகைய இஸலாமிய தீர்வுகளை உலகோர்கு அழகிய முறையில் சொல்லிக் கொண்டிருக்கும் டாக்டர் ஜாகிர் நாயக் போன்றோர் எந்த மதரஸாக்களுக்கும் சென்று ஏழு வருடங்கள் கல்வி பயின்று மவ்லவி ஆலிம் என்பதாக பட்டம் பெற்றவர்கள் அல்லர் என்பது ஆச்சரியமான ஒர் விஷயமாகும்.
ஆனால் நம்மூர் மதரஸா கல்வி முறைமை அத்தகைய இஸ்லாமிய தீர்வுகளை சரிவர எடுத்து சொல்லும் ஆலிம்களை உருவாக்கவில்லை என்பது கசப்பான உண்மையாகும்.
அரபுலகில் பிரசித்தி பெற்று விளங்கும் எகிப்து அல் அஸ்ஹர் இஸ்லாமிய பல்கலைக் கழகம்,மதீனா பல்கலைக்கழகம் போன்றவற்றில் மார்கக் கல்வி கற்றவர்கள் இஸ்லாமிய கல்வித் துறையில் தனி முத்திரை பதித்து வருகின்றனர்.அத்தகைய கலாசாலைகளில் பின்பற்றப்படும் போதனை முறைகளை நமது மதரஸாக்களில் கொண்டு வர முயல வேண்டும்.
நமது மதரஸாக்களில் அரபி மொழிக்கு அடுத்த படியாக உர்து மொழிக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.இஸ்லாம் உலகம் முழுமைக்குமான வாழ்க்கை நெறியாகும்.ஆகையால் சர்வதேச மொழியான ஆங்கிலம் மதரஸா பாடத்திட்டத்தில் கட்டாயம் இணைக்கப் படவேண்டும்.
நபிகளார் காலத்தில் வாழ்ந்த இறைமறுப்பாளர்களைக் காட்டிலும் இன்றைய யூதர்களால் இஸ்லாமும் நமது உயிரினும் மேலான நபிகளாரும் மிகத் தரக் குறைவாக விமர்சிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது.இத்தீய சக்திகள் ஊடகங்களை தங்களது கரங்களில் ஆயுதமாக ஏந்தியுள்ளனர்.
முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும் என்பதைப் போல நாமும் ஊடகங்களை முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.நமது மதரஸாக்களில் ஊடக பயன்பாடு குறித்த கல்வி போதிக்கப்பட வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக சம்பந்தப்பட்டவர்கள் இத்தகைய மாற்றங்களை விரும்பி ஏற்றுக்கொள்ள வேண்டும்.முன்வருவார்களா..?
Friday, September 14, 2012
Tuesday, September 11, 2012
சினிமாக் காரர்களே.... உங்களைத் தான்.....
சுமார் இருபத்தைந்து ஆண்டுகளாக கூடங்குளம் அணு உலைக்கு எதிராக அந்த பகுதி மக்கள் போராடி வருகின்றனர்.ஆனாலும் இந்த விவகாரம் கூடங்குளத்தை சுற்றி இருக்கும் ஐந்து கிராமங்களோடு மட்டும் சுருங்கிக் கிடக்கிறது.இந்த முடக்கத்திற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.அவற்றில் முக்கியமான ஒரு காரணம் சினிமா.
தமிழகத்தை பொறுத்த வரையில் சினிமாத்துறை மக்களோடு பின்னிப் பிணைந்த ஒன்றாக இருக்கிறது.சாதீயப் பெருமைகளையும் வர்ண பேதங்களையும் பற்றி பேசிய நமது சினிமாக் காரர்கள்,கூடங்குளம் அணுஉலை போன்ற மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளை தங்களின் சினிமாக்களில் பேசத் தவறிவிட்டனர்.சினிமா நடிகர்களை நிஜ நாயகர்களாக கருதி அவர்களை கோட்டைக்கு அனுப்பிக் கொண்டிருக்கும் மக்களுக்கு இத்தகைய பிரச்சனைகளை சினிமா மொழியில் விளக்கினால் மட்டுமே நன்கு புரியும்.
Dam 999 இந்த பெயரை தமிழகத்தை சேர்ந்தவர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது.தென் தமிழகத்தின் விவசாய ஆதாரமாக திகழும் முல்லை பெரியாறு அணையை உடைத்து தென் தமிழகத்தை வறண்ட பாலைவனமாக மாற்ற மலையாள பாசிஸ்டுகள் மேற்கொண்ட சதிராட்டத்தின் உச்ச கட்டம் தான் இந்த Dam 999 என்ற திரைப்படம்.
தமிழின எதிர்ப்பு என்ற ஒற்றை விஷ(ய)த்தை மட்டுமே மூலதனமாக்கி இந்த படம் எடுக்கப்பட்டது.இந்தப் படம் வெளியானதை தொடர்ந்து மலையாள ஊடகங்கள் இதற்க்கு விளம்பரம் தேடித்தருவதில் பெரும் பங்கு வகித்தன.அவர்கள் திட்டமிட்டபடி கேரளா முழுவதும் தமிழர்களுக்கெதிரான வெறுப்புணர்வினை இந்தப்படம் முறையாகவே கட்டமைத்தது.கேரளா எல்லையையும் தாண்டி,தேசிய (?) அளவிலும் இப்படம் பெருமளவில் விவாதிக்கப்பட்டது.
கோலிவுட் காரர்கள் கொஞ்ச நாளைக்கு "சதை வியாபாரம்"செய்யும் வேலையை நிறுத்தி விட்டு கூடங்குளம் அணுஉலையின் ஆபத்துக்களை விவரிக்கும் படங்களை தமிழிலும் ஆங்கிலத்திலும் தயாரிக்கும் உருப்படியான வேலைகளை செய்யத் தொடங்குங்கள்.கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம் என்பது அந்த ஊரை சுற்றியுள்ள சில கிராமங்களோடு முடிக்கப்பட வேண்டிய ஒன்றல்ல.. அது முழு தமிழகத்தை மட்டுமல்ல,முழு இந்தியாவையே உசுப்ப வேண்டிய ஒரு மாபெரும் உணர்ச்சிப் போராட்டமாகும்.
Wednesday, September 5, 2012
Subscribe to:
Posts (Atom)












