Showing posts with label கூடங்குளம். Show all posts
Showing posts with label கூடங்குளம். Show all posts

Tuesday, September 11, 2012

கொடிய அணுஉலை வேண்டாம்...! (கவிதை)



சினிமாக் காரர்களே.... உங்களைத் தான்.....



சுமார் இருபத்தைந்து ஆண்டுகளாக கூடங்குளம் அணு உலைக்கு எதிராக அந்த பகுதி மக்கள் போராடி வருகின்றனர்.ஆனாலும் இந்த விவகாரம் கூடங்குளத்தை சுற்றி இருக்கும் ஐந்து கிராமங்களோடு மட்டும் சுருங்கிக் கிடக்கிறது.இந்த முடக்கத்திற்கு  பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.அவற்றில் முக்கியமான ஒரு காரணம் சினிமா.

 தமிழகத்தை பொறுத்த வரையில் சினிமாத்துறை மக்களோடு பின்னிப் பிணைந்த ஒன்றாக இருக்கிறது.சாதீயப் பெருமைகளையும் வர்ண பேதங்களையும் பற்றி பேசிய நமது சினிமாக் காரர்கள்,கூடங்குளம் அணுஉலை போன்ற மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளை தங்களின் சினிமாக்களில் பேசத் தவறிவிட்டனர்.சினிமா நடிகர்களை நிஜ நாயகர்களாக கருதி அவர்களை கோட்டைக்கு அனுப்பிக் கொண்டிருக்கும் மக்களுக்கு இத்தகைய பிரச்சனைகளை சினிமா மொழியில் விளக்கினால் மட்டுமே நன்கு புரியும்.

 Dam 999 இந்த பெயரை தமிழகத்தை சேர்ந்தவர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது.தென் தமிழகத்தின் விவசாய ஆதாரமாக திகழும் முல்லை பெரியாறு அணையை உடைத்து தென் தமிழகத்தை  வறண்ட பாலைவனமாக மாற்ற மலையாள பாசிஸ்டுகள் மேற்கொண்ட சதிராட்டத்தின் உச்ச கட்டம் தான் இந்த Dam 999 என்ற திரைப்படம்.

 தமிழின எதிர்ப்பு என்ற ஒற்றை விஷ(ய)த்தை மட்டுமே மூலதனமாக்கி இந்த படம் எடுக்கப்பட்டது.இந்தப் படம் வெளியானதை தொடர்ந்து மலையாள ஊடகங்கள் இதற்க்கு விளம்பரம் தேடித்தருவதில் பெரும் பங்கு வகித்தன.அவர்கள் திட்டமிட்டபடி கேரளா முழுவதும் தமிழர்களுக்கெதிரான வெறுப்புணர்வினை இந்தப்படம் முறையாகவே கட்டமைத்தது.கேரளா எல்லையையும் தாண்டி,தேசிய (?) அளவிலும் இப்படம் பெருமளவில் விவாதிக்கப்பட்டது.

கோலிவுட் காரர்கள் கொஞ்ச நாளைக்கு "சதை வியாபாரம்"செய்யும் வேலையை நிறுத்தி விட்டு கூடங்குளம் அணுஉலையின் ஆபத்துக்களை விவரிக்கும் படங்களை தமிழிலும் ஆங்கிலத்திலும் தயாரிக்கும் உருப்படியான வேலைகளை செய்யத் தொடங்குங்கள்.கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம் என்பது அந்த ஊரை சுற்றியுள்ள சில கிராமங்களோடு முடிக்கப்பட வேண்டிய ஒன்றல்ல.. அது முழு தமிழகத்தை மட்டுமல்ல,முழு இந்தியாவையே உசுப்ப வேண்டிய ஒரு மாபெரும் உணர்ச்சிப் போராட்டமாகும்.