Sunday, November 8, 2020

ஜோ பைடனின் மறுபக்கம் - ரபீக் சுலைமான்

 ஆயிரம் இருக்கட்டுங்க...

ஆக இளம் வயதிலேயே செனட் உறுப்பினராகி, அந்த சந்தோசம் நீடிக்கும் முன்னரே ஒரு பெரிய விபத்தில் தனது மனைவியையும் மகளையும் இழந்து நின்றார். இரண்டு சிறுவயது மகன்களுக்கு ஒற்றைப் பெற்றோர் ஆனார். என்னடா வாழ்க்கை இதுன்னு வாழ்க்கையை முடித்துக் கொள்ளப் போகும் நேரத்துல, தாயையும் இழந்து தந்தையையும் இழந்துவிட்டால் அந்த ரெண்டு பிள்ளைங்களும் என்ன செய்வாங்க? அப்படின்னு யோசிச்சு ஒரு கணத்திலே வாழ முற்பட்டார். 


 தன்னுடைய அலுவல் முடித்து வீட்டுக்குத் திரும்பும்போது, நாலு மணி நேர இரயில் பயணத்தில், பிள்ளைகளுக்கு இரவு கதை சொல்வதற்காக கதைப் புத்தகங்களை வாசித்தார். 


அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அரும்பாடுபட்டு வளர்த்த அருமை மகனை இழந்தார்.


பாசம் மிகுந்த தந்தையாக இருந்தாரே அது ஒன்றே போதும் நாட்டின் ஜனாதிபதியாக இருப்பதற்கு.... வாழ்த்துக்கள் ஜோ பைடன்!!

Rafeeq Sulaiman.

No comments:

Post a Comment