ஒரு சமூகத்தின் வரலாறு மற்றும் பாரம்பரிய பெருமைகளை விளக்கி பேசுவதில் கலை மற்றும் இலக்கிய படைப்புகளுக்கு முக்கிய இடம் இருக்கிறது.
தமிழக முஸ்லிம் சமுதாயத்தில் அதன் வாழ்வியலை சினிமாவாக இதுவரை சரியாக காட்சிப்படுத்தப்படவில்லை என்றொரு குற்றச்சாட்டு தொடர்ந்து முன் வைக்கப்பட்டு வருகிறது.
இது ஒருபுறமிருக்க.... இஸ்லாமிய வாழ்வியல், வரலாறு குறித்த இலக்கிய படைப்புகள் தமிழில் போதுமான பங்களிப்பு இருந்தும், இது குறித்த அடிப்படை புரிதல் இல்லாத சமூகமாக தமிழ் முஸ்லிம் சமூகம் இருக்கிறது என்பது வருத்தமான உண்மை.
பாடல்கள் வழியாக இசை முரசு நாகூர் ஹனிபா அவர்கள் முன்னெடுத்த பிரச்சார பணியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் பணி இன்னும் சரியாக தொடங்கப்படவில்லை.
நமது அண்டை பகுதியான மலபாரில் இது போன்ற குறைபாடுகள் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
மாப்பிள்ளை பாட்டு என்ற பெயரில் அவர்களின் கலைப் படைப்புகள் இன்று வரை அப்டேட் ஆக இருக்கிறது.
யூசுப் நபியின் சரித்திரம்..
மூஸா நபியின் சரித்திரம்...
கதீஜா நாயகி வரலாறு..
ஆயிஷா நாயகி வரலாறு...
இப்படியாக.... அவர்கள் தொடாமல் விட்ட சப்ஜெக்ட் ரொம்ப குறைவு.
சினிமாக்களில் கூட கதீஜா நாயகி குறித்த மாப்பிள்ளை பாட்டு இசைக்கப்படுகிறது ( மாணிக்க மலராய பூவி)
இதில் சிறப்பு என்னவென்றால்... பழைய மாப்பிள்ளை பாட்டுக்களை ரீமிக்ஸ் செய்து 2k kids ரசனைக்கு ஏற்றாற்போல் வருவது மட்டுமல்லாமல்... 2 k kids அவற்றை பாடி யூடியூப் தளத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
இத்தகைய மாப்பிள்ளை பாட்டு முஸ்லிம் அல்லாதவர்கள் மத்தியிலும் நல்ல ரீச் ஆகியுள்ளது என்பது நமக்கு வேண்டுமானால் ஆச்சரியமாக இருக்கலாம். அங்கே அது சாதாரண நடைமுறை ஆக இருக்கிறது.
யூசுப் நபியின் சரித்திர பாடல் இரிஞ்ஞோலி மூஸா எனும் கவிஞர் எழுதிய பழைய சூப்பர் ஹிட் பாடல் தற்போது ரீமிக்ஸ் ஆகி பரபரப்பாக வைரல் ஆகியுள்ளது.
இந்த பாடலை பல்வேறு பாடகர்கள் பாடிய தொகுப்பின் வீடியோ
சமீப காலமாக ஒரு பெண் பாடகர் நாகூர் ஹனீபா பாடலை சிறப்பாக பாடி வருகிறார்.
தமிழில் இசை முரசு நாகூர் ஹனிபா அவர்கள் பாடல்களை ரீமிக்ஸ் செய்து வெளியிடலாம்.
நாகூர் ஹனிபா அவர்களின் குரல் மற்றும் உடல்மொழிகளை காப்பியடிக்காமல் அவை உருவாக்கப்பட வேண்டும்.
- ரிஃபாயி.
No comments:
Post a Comment