Friday, May 22, 2015

ஓ. பன்னீர் செல்வம் : விசுவாசமா? அடிமைத்தனமா..?

இவர் ஆறு மாதங்களாக முதல்வராக தனது கடமையை நிறைவேற்றுவதில் தவறியிருக்கலாம்.
ஆயினும் எதை நோக்கமாக வைத்து ஜெயலலிதா இவரிடம் ஒப்படைத்தாரோ அவரது நம்பிக்கையை இவர் காப்பாற்றி விட்டார் என்பது உண்மை.
அதிமுகவினர் தங்கள் தலைமைக்கு காட்டும் விசுவாசத்தை அடிமைத்தனம் என்று விமர்சிக்கும் மற்ற கட்சியினர் அவர்கள் தமது தலைமைக்கு முழுமையாக விசுவாசமாக நடந்து கொள்கிறீர்களா என்பதை சுயபோரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
இன்றைக்கு எதிர்கட்சி தொண்டர்கள் கட்சித் தலைமையின் உத்தரவுகளுக்கு கட்டுப்படாமல் இருப்பதை கண்கூடாக காண முடிகிறது.
தேர்தல் காலங்களில் இக்கட்சிகளின் உள்ளூர் நிர்வாகம் தமது கட்சிக்கு விசுவாசமாக உழைக்காமல் அதிமுகவின் பண மழையில் நனைந்தது தான் இவர்களின் தொடர் தோல்விக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்தது.
தேர்தல் தோல்விக்கு காரணமானவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக அத்தகையவர்களுக்கு மீண்டும் கட்சியில் பதவி வழங்கியிருப்பதிலிருந்தே "அவர்கள் தோல்விகளில் இன்னும் பாடம் பெறவில்லை" என்பது தெளிவாகிறது.
எதிர்கட்சிகளின் இத்தகைய பலவீனங்கள் தான் ஜெயலலிதாவின் பலம்.
இங்கே தான் அதிமுகவின் தலைமைத்துவம் எத்துனை உறுதியானது என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது.

No comments:

Post a Comment