Sunday, September 2, 2012

நபிகளாரின் வரலாற்றை பேசும் உலக சாதனை புத்தகம்...

படிப்பறிவும் பகுத்தறிவும் இல்லாத காட்டுமிராண்டிகள் சமூகத்தில் பிறந்து,இறை தூது செய்தியின் வழியாக இவ்வுலகிற்கு நீதியையும் நெறியையும் போதித்த இறைத்தூதர் நபிகளார் (அல்லாஹ்வின் அருள் அவர்கள் மீது பொழியட்டுமாக) ஒரு வரலாற்று அதிசயமாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.இவர்களைப் போலவே இவர்களது வாழ்க்கை நெறியினை பேசும் ஒரு புத்தகமும் உலக அதிசயமாக பேசப்படுகிறது.

சவூதியை சேர்ந்த இஸ்லாமிய சட்ட வல்லுநர் டாக்டர் அப்துல்லாஹ் அப்துல் அஜீஸ் அல் முஸ்லிஹ் அவர்களால் இஸ்லாம் குறித்த தவறான புரிதல்களை கொண்டிருப்பவர்களுக்காக தெளிவுகளை ஏற்படுத்தும் வகையில்,நபிகளாரின் வரலாற்றை தாங்கி   அரபி மொழியில் "இறைத்தூதர் முஹம்மது"என்று பெயரிடப்பட்டு ,புத்தகத்துக்கான வழக்கமான அம்சங்களுடன் (கையில் வைத்து படிக்கிறா மாதிரி ) வெளியிடப்பட்ட இந்த நூல்,துபையை சேர்ந்த மஷாஹாத் எனும் நிறுவனத்தின் முயற்சியால் 2012 ஆம் ஆண்டுக்கான கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.


கின்னஸ் உலக சாதனைக்காக சுமார் 1500 கிலோ எடையில் ஐந்து அடி நீளமும்,நான்கு அடி அகலமும் கொண்டு,420 பக்கங்களில் தோலில் அச்சிடப்பட்ட இந்த ராட்சத புத்தகம் "உலகிலேயே அதிக மிக நீளமான புத்தகம்"என்ற பெருமையை பெற்றிருக்கிறது.இந்த நூலின் மதிப்பு அமீரக திர்ஹம் 110 மில்லியன் ஆகும். 


அமீரகத்தின் துபையை தொடர்ந்து அல் அய்ன் போன்ற நகரங்களில்,மக்கள் ஒன்று கூடும் "ஷாப்பிங் மால்"களில் தற்பொழுது பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள இந்த "மெகா"புத்தகம்,தொடர்ந்து குவைத்,சவூதி அரேபியா மற்றும் முஸ்லிம் நாடுகளின் தலை நகரங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.





No comments:

Post a Comment