Saturday, September 15, 2012

நியாயவான்களே...!

இறைத்தூதர் முஹம்மது நபி (அவர்களின் மீது இறையருள் பொழிவதாக) அவர்களை இழிவு படுத்தும் வகையில் அமெரிக்க வாழ் யூதன் ஒருவன் Innocent Muslims என்ற பெயரில் எடுத்துள்ள படத்தின் டிரைலர் காட்சிகள் youtube சமூக தளத்தில் வெளியிடப்பட்டதை தொடர்ந்து உலகெங்கிலுமுள்ள இஸ்லாமிய சமூகம் உணர்ச்சிப் பிழம்பாய் வீதியில் இறங்கி, இந்த திரைப்படத்தை எடுத்த அந்த நபரை கண்டித்தும்,இத்தகைய துவேஷங்களுக்கு துணை போகும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி'யை கண்டித்தும் பெரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இஸ்லாமிய நம்பிக்கைகளையும்,இறைத் தூதர் முஹம்மது நபி (அவர்களின் மீது இறையருள் பொழிவதாக) அவர்களையும் இழிவு படுத்தும் போக்கு இன்று நேற்றல்ல.. காலங்காலமாகவே நடைபெற்று வருகிறது.உலக மக்களில் பெரும்பாலானோர் ஏதாவது ஒரு மதத்தை தமது வாழ்வியல் நெறியாக பின்பற்றிக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் ஒரு மத நம்பிக்கையினை மற்றொரு மதத்தவர் அவமதிப்பது பதிலுக்கு அவர்கள் இவர்களை இழிவு படுத்துவது போன்ற நிகழ்வுகள் உலகின் ஏதாவது ஒரு மூலையில் நடைபெற்றுக் கொண்டேதானிருக்கின்றன.ஆயினும் இத்தகைய அக்கப்போர்களுக்கு இஸ்லாத்தில் கிஞ்சிற்றும் இடமில்லை.

இது பற்றி குர்ஆன் தெளிவாகவே கருத்துரைக்கிறது...
(முஸ்லிம்களே) அவர்கள் ஏக இறைவனை விடுத்து யாரிடம் பிரார்த்தனை புரிகிறார்களோ அவர்களை நீங்கள் ஏசாதீர்கள். (குர்ஆன் 6:108) 

இத்தகைய அழகிய வழிகாட்டுதல்களை பின்பற்றுவதால் தான் இஸ்லாமியர்கள் மற்ற மத நம்பிக்கைகளையோ,அவர்களின் தெய்வங்களையோ விமர்சிப்பது கிடையாது.கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இத்தகைய அவதூறுகளுக்கு அரசாங்கங்கள் அங்கீகாரம் அளிக்குமானால் அதனை முஸ்லிம்கள் வெறுமனே வேடிக்கை பார்த்து கொண்டிருக்கமாட்டார்கள்.

இன்றைக்கு இஸ்லாமிய சமுதாயம் வீதியில் இறங்கி போராடுவது இத்தகைய கட்டுப்பாடற்ற கருத்து சுதந்திரத்தை வழங்கி வரும் அமெரிக்க போன்ற அரசுகளுக்கு பாடம் புகட்டுவதற்காக தானே ஒழிய நபிகளாரை இழிவு படுத்திய யூதனின் மதத்தை கண்டிப்பதற்க்காகவோ அல்லது இழிவு படுத்துவதற்காகவோ அல்ல என்பதை நடுநிலையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

துவேஷத்துடன் முன்வைக்கப்படும் இத்தகைய விஷம கருத்துக்கள்,அறியாத மக்களுக்கு இஸ்லாத்தை பற்றியும்,நபிகளாரை பற்றியும் அறியத் தூண்டும் ஓர் உந்து சக்தியாக வடிவம் பெற்று வருகிறது என்பது சமீப காலங்களில் உலகம் கண்டு வரும் உண்மையாகும்.

No comments:

Post a Comment