Thursday, October 11, 2012

தமிழக முஸ்லிம் நாட்டுப் புறக் கலைஞர்கள்: பக்கிரிஷாக்கள்....!

மிக நீண்ட நாள்கள் கழித்து இந்த பக்கிரிசா பாடல்களை கேட்ட பொழுது சிறு பிராயத்தின் நினைவுகள் என் கண் முன்னே நிழலாடிச் சென்றன.நோன்பு காலங்களில் சஹர் நேரங்களில் சாப்பிடுவதற்கு இந்த மாதிரியான பாடல்களை பாடிக்கொண்டு உறங்குபவர்களை எழுப்பும் உன்னத பணியை செய்பவர்கள் தாம் இந்த பக்கிரிஷாக்கள்.வாரந்தோறும் வெள்ளிக்கிழமை காலை நேரங்களில் இவர்களின் பாடல்கள் ஒலிக்காத முஸ்லிம் கிராமங்கள் தமிழகத்தில் இல்லை என்று சொல்லும் அளவுக்கு,தமிழக முஸ்லிம்களின் வாழ்க்கையோடு ஒன்றிப் போயிருந்தனர்.

மார்க்கத்துக்கு முரணான சில காரியங்களை தவிர்த்து விட்டு,இவர்களது கலைப் பணியை நாம் ஆய்வு செய்தோமேயானால் நிச்சயமாக இவர்கள் தமிழக முஸ்லிம்களின் கலாச்சார அடையாளங்கள் என்பதில் ஐயமில்லை.

 

இந்திய விடுதலைப் போராட்டத்தில் பக்கிரிஷாக்களின் பங்கு மகத்தானதாகும்.தங்களது பாடல்களின் வாயிலாக தேசத்தின் விடுதலை வேட்கையினை பட்டி தொட்டியெங்கும் உருவாக்கியுள்ளனர்.வீரியமான தமிழ் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர்களான இவர்களுக்கு தமிழக முஸ்லிம்களிடையே "சவால் பக்கீர்"என்றொரு பெயரும் வழங்கப்படுகிறது.

 இவர்களை நமது சமூகம் வெறுமனே யாசகர்களாக பார்த்தது ஒரு வரலாற்றுப் பிழையாகும்.

 கொள்ளுமேடு ரிஃபாயி

No comments:

Post a Comment